நன்றியுடன் வணக்கம்!

இணையத்தளம் காண வந்த தங்களுக்கு..
நன்றியுடன் வணக்கம்!
எழுத்தும் ஒப்பனையும்
என் இரு கண்களாகி...
மெல்ல மெல்ல நடைபயின்றும்
மேனியெல்லாம் ரணமடைந்தும்..
மேல்நிலையை எட்டுதற்காய்
மேடைகளை தேடுகிறேன்..
இலட்சியங்களை எட்டுதல் தான்
நிறைவான வாழ்க்கை..
எட்டுதலுக்கு எத்தனித்தல் - இது
என் வாழ்க்கை..
என்னுடன் கைகொடுக்கும்
உள்ளங்கள் அத்தனைக்கும்
இணைந்திருக்கும் உங்களுக்கும்
மீண்டும் நவில்கிறேன்..
நன்றியுடன் வணக்கம்!
-லோகா-
5 Comments:
அடடா அரம்பிச்சிட்டாங்கையா அரம்பிச்சிட்டாங்க. :-)) ம்... தொடர்ந்து எழுதும் Loka. தமிழ்மணத்தில் இணைப்பதைப்பற்றி ஒரு மின்னஞ்சல் போடுகிறேன். அதற்குமுதல் 2 அல்லது 3 Post எழுதுங்கோ சாமி. :-))
Monday, November 21, 2005 4:53:00 AM
//என்னுடன் கைகொடுக்கும்
உள்ளங்கள் அத்தனைக்கும்
இணைந்திருக்கும் உங்களுக்கும்
மீண்டும் நவில்கிறேன்..
நன்றியுடன் வணக்கம்//
நாங்கள் கைகொடுக்காமல்
வேறயாரு கைகொடுக்கிறது தமிழனே ஹா?
:-)
அழகான சிந்தனைகள் உங்களுக்கு
தொடர்ந்து எழுதுங்கள்
நேசமுடன்..
-நித்தியா
Monday, March 20, 2006 12:54:00 AM
ஆர்வத்துடன் வந்திணைந்து ஆரோக்கியமான கருத்தளிக்கும்
நண்பி நித்தியா தங்களுக்கும்
இலத்திரனியல் வழியில் தொடர்ந்தும்
எனை இணையத் தளத்திற்கு இழுத்துவரும் நண்பன் தருசனுக்கும் நன்றியுடன் மீண்டும்
வரவேற்பு வணக்கம்!
நட்புடன்
-லோகா -
Wednesday, March 22, 2006 11:08:00 AM
அதுசரி முதலிலே வாரவேற்றது நான். அது என்ன உங்களுக்கு முதலில் நித்தியாவை தெரிந்திருக்கிறது. அதன்பின்தான் தர்சன் தெரிந்தார்போலும். :-(( சரி சரி
முதலில் Ronan Jimson போடுவதுபோன்ற விளம்பர பின்னூட்டல்களை தவிர்க்க மறுமெழி மட்டுறுத்தல் செய்வது அவசியம் அன்பரே. இல்லாட்டி தமிழ்மணத்திற்குள்ளே விடவே மாட்டார்கள்.
Wednesday, August 30, 2006 5:35:00 PM
வலைப் பூவிற்குள்
வந்து சென்றாலும்
வாழ்த்தி ஊக்கமளிக்க
எல்லையற்ற மனம் வேண்டும்!
அவ்வகையில்..
புதிதாக வரவேற்கும்
அன்புத் தோழி தயாவிற்கும்
நன்றியுடன் மீண்டும்
வரவேற்பு வணக்கம்!
நட்புடன்
-லோகா -
Wednesday, October 04, 2006 3:51:00 PM
Post a Comment
<< Home